சினிமா

மீண்டும் COP ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி : சன் பிக்சர்ஸ் உடன் இணைந்த பொன்ராம் !

ரஜினி, விஜய், சூர்யா வரிசையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

மீண்டும் COP ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி : சன் பிக்சர்ஸ் உடன் இணைந்த பொன்ராம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். இதன் தயாரிப்பில் ரஜினியின் அண்ணாத்த, விஜயின் 65வது படம், சூர்யாவின் 40வது படம் எனப் பல படங்கள் உருவாகி வருகிறது. இப்போது இந்த பட்டியலில் இன்னொரு முன்னணி நடிகரின் படத்தை பற்றியும் அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது. இது விஜய் சேதுபதியின் 46வது படம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலிஸ் ரோலில் நடிக்கிறார் என படத்தின் மோஷன் போஸ்டர் மூலம் தெரிகிறது. இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க இருக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக அனுகீர்த்தி வாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது. இமான் இசையமைக்க படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் தினேஷ் கிருஷ்ணன். இந்தப் படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாரும் ஊரே யாவரும் கேளீர், முகிழ், மணிரத்னத்தின் ஆந்தாலஜி, `நவரசா'வில் பிஜோஜ் நம்பியார் இயக்கத்தில் ஒரு படம் என படங்கள் தயாராக இருக்கிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடம், தீபக் சுந்தர்ராஜன் இயக்கதில் ஒரு படம், மாநகரம் இந்தி ரீமேக் எனப் பலப் படங்களில் பணியாற்றி வருகிறார்.

banner

Related Stories

Related Stories