சினிமா

தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கோவாவில் கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன்! #ViralPhoto

தொடர்ந்து நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.

தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கோவாவில் கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன்! #ViralPhoto
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை இன்று (வெள்ளிக்கிழமை) காதலி நயன்தாராவுடன் கோவாவில் கொண்டாடினார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக இத்தனை நாட்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் தற்போது தங்களது விடுமுறையைக் கொண்டாட கோவாவிற்கு தங்களது குடும்பதினருடன் சென்றுள்ளனர்.

இதனை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

தனது பிறந்தநாளை நயன்தாராவுடன் கோவாவில் கொண்டாடும் இயக்குனர் விக்னேஷ் சிவன்! #ViralPhoto

இந்த அருமையான சூழலில் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இணையத்தில் அவர் வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

banner

Related Stories

Related Stories