சினிமா

அக்டோபர் 2ஆம் தேதி OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தின் வெளியீட்டு தகவல்கள் படத்தின் நடிகர்களால் ஆன்லைனில் தெரியவந்துள்ளது. விவரங்களை உள்ளே படியுங்கள்...

அக்டோபர் 2ஆம் தேதி OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘க/பெ ரணசிங்கம்’ கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்திருக்க வேண்டிய படம். கொரோனா பிரச்னை காரணமாக ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாகக் கடந்த மாதம் முதலே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்தப் படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளிவரும் என விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இயக்குநர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’.இந்த படம் வைரமுத்து பாடல் வரிகளுடன் ஜிப்ரானின் இசையில் தயாராகியுள்ளது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அக்டோபர் 2ஆம் தேதி OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி படம்!

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் யூட்யூபில் வெளியானது. டீசரை பார்க்கும் போது இந்த படத்தின் கதைக்களம் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் போராடும் காட்சிகளே டீசரில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தைக் குறிப்பிட்ட நேரம் தேதி குறிப்பிட்டு, கட்டணம் செலுத்தி ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories