சினிமா

“அருமையான Entryயோட வரேன்” - ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு தீணி போட்ட ‘வைகைப்புயல்’ வடிவேலு! Video

தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.

“அருமையான Entryயோட வரேன்” - ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கு தீணி போட்ட ‘வைகைப்புயல்’ வடிவேலு! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவன் அண்மைக்காலமாக திரையில் தோன்றாமல் இருந்தாலும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்க முடியாத இடத்தை நிரப்பி வைத்திருக்கிறார்.

மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகவே வலம் வருகிறார் நடிகர் வடிவேலு. அவரது பிறந்த நாள் நேற்று (செப்.,12) கொண்டாடப்பட்டது. வழக்கமாக வடிவேலுவை வைத்து மீம்ஸ் போட்டு வரும் நெட்டிசன்கள் நேற்று அவருடைய பாணியிலேயே அவருக்கு மீம்ஸ் போட்டு அசத்தினார்கள்.

ட்விட்டரிலும் #HappyBirthdayVadivelu என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும், மீண்டும் திரையில் தோன்றுவது குறித்து தொடர்ந்து அவரிடம் எழுப்பப்பட்டு வந்த கேள்விகளுக்கும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கும் தீணி போடும் வகையில் விரைவில் மிகப்பெரிய அருமையான என்ட்ரியோடு வருகிறேன் எனவும் வடிவேலு கூறியுள்ளார்.

ஏற்கெனவே வெப் சீரிஸ்களில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இப்படி இருக்கையில் அவரே கூடிய விரைவில் திரையில் வருவது குறித்து பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories