சினிமா

இல்லுமினாட்டிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும் இயக்குனர்- ‘Eyes Wide Shut' படத்திற்குப் பின்னே மர்மக் கதை!

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் குப்ரிக்கிடம் நீக்கவேண்டும் என்று முறையிட்ட காட்சிகளை நீக்கிய பிறகே 'Eyes wide shut' படத்தை திரையரங்கில் வெளியிட்டனர்.

இல்லுமினாட்டிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும் இயக்குனர்- ‘Eyes Wide Shut' படத்திற்குப் பின்னே மர்மக் கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Subash Chandra Bose
Updated on

தன் இறுதிப் படமான ‘Eyes Wide Shut’ படத்தில் ரகசிய சமூகம் என்று கருதப்படும் இல்லுமினாட்டிகளின் பாவச்செயல்கள் மற்றும், அதில் இருக்கும் முக்கிய புள்ளிகளை அடையாளப்படுத்தியதற்காக இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) என்ற இயக்குனர் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் பரவி, பலரால் நம்பப்பட்டு வருகிறது.

IQ சோதனையில் 200 புள்ளிகளை கொண்ட, அசாத்திய புத்திக்கூர்மை கொண்ட மனிதர் என்று அனைவராலும் வியக்கத்தக்கவர் ஸ்டான்லி குப்பிரிக். ஒவ்வொரு இயக்குனருக்கும் திரைப்படம் இயக்குவதில் தனி நடை இருக்கும். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நடையில் அடைபடாமல், யூகிக்கமுடியாத இயக்குனராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குப்ரிக்.

"அப்போலோ லூனார் மாடுல் ஈகிள்" என்னும் விண்கலம் மூலம் 1969 ஆம் ஆண்டு வெற்றிகரமாக நிலவில் முதல் ஆளாய் கால் பாதித்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்! அந்தப் பெருமை அமெரிக்காவையே சாரும். ஆனால் அது உண்மையில்லை என்று சிலரால் கருதப்பட்டு வந்தது. ‘2001: A Space Oddesy’ என்ற விண்வெளிப் படத்தை 1968 ஆம் ஆண்டே தத்ரூபமாக இயக்கியவர் குப்ரிக்.

இல்லுமினாட்டிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும் இயக்குனர்- ‘Eyes Wide Shut' படத்திற்குப் பின்னே மர்மக் கதை!

ஆகையால் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் குப்ரிக்கை அழைத்து, மனிதர்கள் நிலவில் இறங்கியதைப் போன்ற பொய்யான ஒரு வீடியோவை இயக்கித்தர கூறியதாகவும், அதனால் குப்ரிக் மனஉளைச்சல் அடைந்ததாகவும், பல வதந்திகள் காற்றில் பரவிய வண்ணம் இருந்தன. அந்த பிரச்னையின் விளக்கமாக தன் சைக்கலாஜிக்கல் திரில்லர் படமான ‘The Shining’ வாயிலாக பல உண்மைகளை மறைமுகமாகக் கூறியிருந்தார் குப்ரிக் என்ற பேச்சுகளும் பரவின.

நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், கதையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி ‘The Shining’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் வரும் காட்சிகளை கட்டுடைத்து நாசாவில் குப்ரிக்கிற்கு நடந்த விஷயங்களை ஒப்பிட்டு, பல விமர்சகர்களும் எழுதி வந்தார்கள். இவ்வாறு பல சர்ச்சையில் குப்ரிக் சிக்கியிருந்தாலும், தன் 70 வயதில் ஒரு படம் இயக்கத் திட்டமிட்டார். Eyes wide shut என்ற தலைப்பில், டாம் க்ரூஸ் மற்றும் நிக்கோல் கிட்மேன் நடித்த அந்தப் படமும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.

டாக்டர் பில் ஹார்போர்ட் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு புதிய நகரத்திற்கு இடம்பெயர்கிறார். அங்கு அவரது நண்பரான விக்டர் ஒரு விருந்திற்கு பில்லை அழைக்கிறார். அங்கு செல்லும் பில், தன் மனைவி வேறொருவருடன் நடனம் ஆடுவதைப் பார்த்து கோபம் கொள்கிறார். இதற்கிடையில் விக்டர் பில்லை தன் அறைக்கு வேகமாக வரச் சொல்லி அழைக்க, அங்கு போதையில் மயங்கி இருக்கும் ஒரு பெண்ணை பார்க்கிறார் பில்!

இல்லுமினாட்டிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும் இயக்குனர்- ‘Eyes Wide Shut' படத்திற்குப் பின்னே மர்மக் கதை!

மருத்துவரான பில் அந்தப் பெண்ணை காப்பாற்றியதோடு, இனிமேல் போதை பொருட்களை உட்கொள்ளாதே என்று அறிவுரையும் கூறிவிட்டு கிளம்புகிறார். வீட்டிற்கு வந்ததும், அன்று இரவு தன் மனைவி இன்னொருவருடன் நடனம் ஆடியது குறித்துக் கேட்க, அதற்கு அவரது மனைவி முன்பொருகாலத்தில் ஒரு கப்பல் படை அதிகாரியின் மீது காதல் வசப்பட்டதையும், அன்று தன் கணவரான பில்லையும், தன் குழந்தையையும் விட்டுவிட்டு அவருடன் சென்றுவிடலாம் என்று எண்ணியதாகவும் கூறுகிறாள்.

இதையெல்லாம் கேட்டு மனஉளைச்சலுக்கு ஆளான பில், ஒரு மதுபானக் கடைக்குச் செல்கிறார். அங்கு தன் பால்ய நண்பரும், இசைக்கலைஞருமான நிக் நைட்டிங்கேளை யதேச்சையாக சந்திக்கிறார். தன் மன வேதனைகளை நிக்கிடம் கூற, நிக் தான் செல்லவிருக்கும் ஒரு ரகசிய நிகழ்ச்சியைப் பற்றி பில்லிடம் கூறுகிறார். அந்த நிகழ்ச்சிக்குத் தானும் வருவதாக பில் வற்புறுத்தி கேட்டதால் அது நடக்கும் இடத்தையும், உள்ளே அனுமதிக்க ஒரு கடவுச்சொல்லையும் நிக் கூறுகிறார். அதனைப் பின்பற்றி அன்று இரவு முகமூடிகளை வாங்கிக்கொண்டு, பில் அந்த ரகசிய நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அது ஒரு பாலியல் இன்பம் காணும் இடமாக இருக்கின்றது. அதனை நடத்துபவர்களே இல்லுமினாட்டிகள்! அங்கு பில்லிற்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

இல்லுமினாட்டிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும் இயக்குனர்- ‘Eyes Wide Shut' படத்திற்குப் பின்னே மர்மக் கதை!

இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது.படம் முழுமையாக முடிக்கப்பட்டதும் குப்ரிக் அதனை தயாரிப்பாளர்களுக்கு காண்பிக்கிறார். அப்படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனத்தினர், அதிர்ந்தும் பயந்தும் போகிறார்கள். இதனால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று குப்ரிக்கிடம் எடுத்துக்கூறியும் அவர் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. படத்தில் சில காட்சிகளை நீக்கக்கோரி குப்ரிக்கிடம் முறையிட்டும் அது பலன் தருவதாக இல்லை. குப்ரிக் பிடிவாதமாய் இருந்தார், ஆனால் இந்த வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே இருந்த நிலையில் ஒருநாள் உறக்கத்திலேயே குப்ரிக் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி அனைவரையும் உலுக்குகிறது. திரைத்துறையில் அது பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

அனைவரையும் தாண்டி, 'Eyes wide shut' படத்தில் நடித்த, டாம் மற்றும் நிக்கோல் மிகுந்த பீதியில் ஆழ்ந்தனர். சில காலம் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தனர். குப்ரிக்கின் மரணத்தை அவர்களால் சுலபமாக கடந்துவிட முடியவில்லை. பின்னர், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் குப்ரிக்கிடம் நீக்கவேண்டும் என்று முறையிட்ட காட்சிகளை நீக்கிய பிறகே 'Eyes wide shut' படத்தை திரையரங்கில் வெளியிட்டனர். இன்று வரை அதில் நீக்கப்பட்ட காட்சி ரகசியமாகவே இருக்கின்றது.

banner

Related Stories

Related Stories