சினிமா

நாயகனாகும் பாரத்... சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கும் ‘Finally’ குழுவினர்!

‘ஃபைனலி’ குழுவினர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தை லிப்ரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நாயகனாகும் பாரத்... சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கும் ‘Finally’ குழுவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் யூ-ட்யூப் உலகில் பிரபலமான சேனலாக இயங்கி வருகிறது 'ஃபைனலி' (Finally). இவர்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நகைச்சுவையில் புதிய யுத்திகளை கையாண்ட இந்தக் குழுவினருக்கு பல தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சி தயாரிக்க, நடிக்க வாய்ப்பு கிடைத்து, அசத்தி வருகின்றனர்.

பெரும் கனவுகளோடு பொழுதுபோக்கு ஊடக உலகில் அடியெடுத்து வைத்த ‘ஃபைனலி’ குழுவினர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றைத் தொடங்கவுள்ளனர். இப்படத்தை லிப்ரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நாயகனாகும் பாரத்... சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கும் ‘Finally’ குழுவினர்!

லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ‘ஃபைனலி’ மூலம் பிரபலமான நிரஞ்சன் இயக்குகிறார். ஃபைனலி சேனலின் சி.இ.ஏ பாரத் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து ஃபைனலி குழுவினர் தெரிவித்ததாவது, “எங்களது யூ-ட்யூப் வீடியோக்களை பார்த்த லிப்ரா புரொடக்ஷன் நிறுவனர் ரவிசங்கர் சந்திரசேகரன் எங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அழைத்து எங்கள் வீடியோக்கள் குறித்துப் பேசி வெகுவாகப் பாராட்டினார். அப்போது திரைப்படத்திற்கான கதைகள் உள்ளதா என கேட்டார், அப்படித்தான் இந்த சினிமா துவக்கம்.

எங்களது இயக்குனர் நிரஞ்சன் சொன்ன கதை அவருக்குப் பிடித்து போகவே, இப்போது படம் தொடங்கவிருக்கிறது. தற்போது திரைக்கதைக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories