சினிமா

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!

நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில், கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். அழகியல் மற்றும் சரும, தோல் சம்பந்தமான மருத்துவராகவும் பணி புரிந்து வரும் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை எம்.ஆர்.சி நகரில் வசித்து வந்தார்.

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!

இவர் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடயே கொரோனா குறித்து விழிப்புணர்வு எற்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

இந்த செய்தி கேட்டதும் திரை உலகில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories