சினிமா

“மனுசனை பாதுகாக்க மனுசன் தான் வரணும்; கடவுள் வரமாட்டார்” : 'மாஸ்டர்' விழாவில் விஜய் சேதுபதி பேச்சு! Video

கொரோனா வைரஸ் பரவி வருவதால் யாரும் அச்சப்பட வேண்டாம். மனிதனை பாதுகாக்க மனிதன் தான் வரணும். கடவுள் வரமாட்டார் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

“மனுசனை பாதுகாக்க மனுசன் தான் வரணும்; கடவுள் வரமாட்டார்” : 'மாஸ்டர்' விழாவில் விஜய் சேதுபதி பேச்சு! Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தp படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் பூஜை முதல் ஷூட்டிங் முடிந்தது வரை தொடர்ந்து பலவித அப்டேட்களை கொடுத்து வந்த படக்குழு நேற்றைய தினம் இசை வெளியீட்டு விழாவைக் கொண்டாடியது. இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், “மாஸ்டர் படத்தோட போஸ்டர் வெளியிடுவதற்கு முன் படக்குழுவினருக்கு, விஜய் சார் போன் பண்ணி என்னோட பெயரையும் சேர்க்கச் சொன்னாராம், அதைக் கேட்டு ரொம்ப ஷாக் ஆனேன். எல்லா நடிகர்களுக்கும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கணும்னு நினைக்கிறவர் விஜய்.

அதுமட்டுமல்ல, படப்பிடிப்பின் போது, அங்கு அதிகமா நான் பேசுவேன். அதனால் நீங்க ஏன் அதிகமாகப் பேசுறதில்லனு விஜய் சார்கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் நான் பேசுறதவிட அதிகமா கவனிப்பேன்னு சொன்னார்.” என்றார்.

மேலும், “இந்தப் படத்துல நான் தான் ஹீரோ. ஏன்னா அவருக்கு நான் வில்லன்னா, எனக்கு அவரும் வில்லன் தான.. அப்போ நான் தான ஹீரோ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா வைரஸ் பரவி வருவதால் யாரும் அச்சப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். மனிதனைப் பாதுகாக்க மனிதன் தான் வரணும். கடவுள் வரமாட்டார். சாமி பல ஆண்டுகளாக இருக்கிறது. எந்த பிரச்னை வந்தாலும் அது தன்னை காப்பாற்றிக் கொள்ளும்.

ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் மகத்துவம் வாய்ந்த மனிதனை அது இன்னும் படைக்கவில்லை. அதனால் சாமியை காப்பாற்றுகிறேன் என சொல்லும் யாரையும் நம்பாதீர்கள். ஏன்னா கடவுளால எந்த மனிதனாலும் காப்பாத்தமுடியாது.

தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பகிராமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள். இந்த உலகம் மனிதர் வாழ்வதற்கானது. எனவே, அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம். ” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories