சினிமா

“நோ டென்ஷன் பேபி...” : தெறிக்கவிட்ட ‘மாஸ்டர்’ விஜய் - வெளியானது பாடலாசிரியர் ரகசியம்!

‘மாஸ்டர்' படத்தில் விஜய் பாடிய ‘ஒரு குட்டி கதை’ பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

“நோ டென்ஷன் பேபி...” : தெறிக்கவிட்ட ‘மாஸ்டர்’ விஜய் - வெளியானது பாடலாசிரியர் ரகசியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘பிகில்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள்.‘மாஸ்டர்’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘மாஸ்டர்’ படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மாஸ்டர் பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்து திடீரென போஸ்டர் வெளியிட்டு அறிவித்ததையடுத்து ரசிகர்கள் வெகுவாக உற்சாகமானார்கள்.

‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டி கதை' பாடல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யே பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

அதேநேரம் இப்படத்தின் பாடலாசிரியர் யார் என்பது சர்ப்ரைஸாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘மாஸ்டர்' படத்தில் விஜய் பாடிய ‘ஒரு குட்டி கதை’ பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

சற்று முன்பு வெளியிடப்பட்ட ‘ஒரு குட்டி கதை’ பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories