சினிமா

'மாஸ்டர்' சிங்கிள் : 'ஒரு குட்டிக் கதை' பாடலை எழுதியது இவர்தானா? - இது புது அப்டேட்..!

‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை எழுதியது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது.

'மாஸ்டர்' சிங்கிள் : 'ஒரு குட்டிக் கதை' பாடலை எழுதியது இவர்தானா? - இது புது அப்டேட்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்யின் ‘மாஸ்டர்’ பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் விழிமேல் விழி வைத்து காத்திருந்த காலம் போய், நாளுக்கு நாள் அப்டேட்ஸ் வந்த வண்ணம் இருப்பதால் எதை எப்போது ட்ரெண்ட் செய்வதென்று புரியாமல் ரசிகர்கள் தற்போது விழிபிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ படத்தின் போஸ்டர்கள் வெளிவந்ததற்குப் பிறகு, வருமான வரித்துறை சோதனைக்குப் பின்னர் படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே மேன்மேலும் உயர்ந்துகொண்டே வருகிறது.

நெய்வேலியில் எடுத்த செல்ஃபியை விஜய் பகிர்ந்த மறுநாளே படத்தின் ‘ஒரு குட்டிக் கதை’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானதால் சமூகவலைதளங்கள் விஜய் ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் விஜய்யே அந்தப் பாடலை பாடியிருப்பதால் மேலும் குஷியாகியுள்ளனர்.

இந்நிலையில், நாளை மாலை பாடல் வெளியாகவுள்ளது. ஆனாலும் படத்தின் பாடலாசிரியர் யார்? ‘ஒரு குட்டிக் கதை’ பாடலை எழுதியது யார் என்ற விவாதத்தை நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, அருண்ராஜா காமராஜ் ஒரு குட்டிக் கதை பாடலை எழுதியிருக்கக் கூடும் என பேசப்பட்ட நிலையில், அதனை அவரே ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

'மாஸ்டர்' சிங்கிள் : 'ஒரு குட்டிக் கதை' பாடலை எழுதியது இவர்தானா? - இது புது அப்டேட்..!

இருப்பினும், படக்குழு தரப்பில் இதுவரையில் யார் பாடலாசிரியர் என்பதை வெளிப்படுத்தாமலே உள்ளதால் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு சஸ்பென்ஸ் எந்தப் படத்துக்கும் இருந்திருக்க முடியாது என்றும் கோலிவுட் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories