சினிமா

தர்பார் நஷ்டம் : “ரஜினி பேச்சை நம்பித்தான் படத்தை வாங்கினோம்” - கதறும் விநியோகஸ்தர்!

ரஜினியின் ‘தர்பார்’ படம் நஷ்டமடைந்ததை அடுத்து அவரிடம் முறையிடச் சென்ற விநியோகஸ்தர்களை போலிஸ் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

தர்பார் நஷ்டம் : “ரஜினி பேச்சை நம்பித்தான் படத்தை வாங்கினோம்” - கதறும் விநியோகஸ்தர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘தர்பார்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்த ‘தர்பார்’ படம் வசூலிலும் ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் ரஜினிகாந்தின் படத்திற்கு நல்ல மவுசு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமயங்களில் அவை கவைக்கு உதவாமல் போவதும் வழக்கம்.

அந்த நிலையே ‘தர்பார்’ படத்துக்கும் நேர்ந்துள்ளது. தமிழகத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்து ‘தர்பார்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தற்போது நஷ்டம் அடைந்ததை எண்ணிக் கதறி வருகின்றனர்.

தர்பார் நஷ்டம் : “ரஜினி பேச்சை நம்பித்தான் படத்தை வாங்கினோம்” - கதறும் விநியோகஸ்தர்!

இதனால், தயாரிப்பு நிறுவனமான லைகாவையும், ஏ.ஆர்.முருகதாஸையும் விநியோகஸ்தர்களை அணுகிய போது அவர்கள் கைவிரித்துள்ளனர். அதன் பிறகு ரஜினியை சந்திக்க திட்டமிட்டிருந்தனர்.

இதனையடுத்து, இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கே நேரடியாகச் சென்று நஷ்டம் ஏற்பட்டது குறித்து முறையிட விநியோகஸ்தர்கள் எத்தனித்துள்ளனர். அப்போது போயஸ் கார்டனுக்குள் நுழைய விடாமல் அவர்களை போலிஸார் தடுத்ததால் வாக்குவாதம் முற்றியது. இதனால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தென் மற்றும் வடக்கு ஆற்காடு விநியோகஸ்தரான திருவேங்கடம் “ரஜினியையும், முருகதாஸையும் நம்பித்தான் பெரும் தொகைக்கு இந்தப் படத்தை வாங்கினோம்.

தர்பார் இசை வெளியீட்டின் போது கூட இந்தப் படம் பாட்ஷா அளவிற்கு இருக்கும் என ரஜினி கூறியிருந்தார். அதனாலேயே நம்பி வாங்கினோம். ஆனால் தற்போது 25 கோடிக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது ‘தர்பார்’ படம்.

லைகா நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு, படத்தின் பட்ஜெட்டில் 70 சதவிகிதம் ரஜினிக்கும், முருகதாஸுக்குமே சம்பளமாக போய்விட்டது. அவர்களிடம் போய் கேளுங்கள் என கைவிரித்துவிட்டனர். ஆகையால் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை வைக்கவே வந்தோம். ஆனால் அனுமதிக்க மறுக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories