சினிமா

ஷங்கர், மகிழ் திருமேனி ஆகியோரோடு போட்டியில் இணைந்த இளம் இயக்குநர் : ‘விஜய் 65’ லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் 65 படத்துக்கான இயக்குநர் யார் எனும் கேள்வி உலா வரும் நிலையில் இளம் இயக்குநர் ஒருவர் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறதோ அதே அளவுக்கு அவருடைய 65வது படத்துக்கும் இருந்து வருகிறது.

விஜய் 65 படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முன்வந்துள்ள நிலையில் அந்தப் படத்தை யார் இயக்கவுள்ளார் என்ற கேள்வியே தற்போது கோலிவுட்டில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே ஷங்கர், மகிழ் திருமேனி, ஏ.ஆர்.முருகதாஸ் என பலரது பெயர்கள் அடிப்பட்டாலும் இதுவரையில் விஜய் 65க்கான இயக்குநர் யார் என்பது உறுதியாகாமல் உள்ளது.

ஷங்கர், மகிழ் திருமேனி ஆகியோரோடு போட்டியில் இணைந்த இளம் இயக்குநர் : ‘விஜய் 65’ லேட்டஸ்ட் அப்டேட்!

இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் விஜய்யிடம் அதிரடியான ஆக்‌ஷன் படத்துக்கான கதையை கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய்யின் அடுத்த படத்துக்கான இயக்குநர் யார் என்னும் கேள்வியோடு விஜய் 65 படத்தை இயக்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories