சினிமா

வசனங்களே இல்லாமல் மிரட்டும் ‘சைக்கோ’ ட்ரெய்லர்!

'சைக்கோ' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வசனங்களே இல்லாமல் மிரட்டும் ‘சைக்கோ’ ட்ரெய்லர்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடித்துள்ளார். இளையராஜா- மிஷ்கின் - உதயநிதி கூட்டணி அமைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘உன்ன நெனச்சு’, ‘நீங்க முடியுமா’ ஆகிய இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில் வசனங்களே இல்லாமல் வெறும் பியானோ இசை மட்டுமே இடம்பெற்றுள்ளது. வசனங்களின்றி மெல்லிய பின்னணி இசையோடு நகரும் காட்சிகள் ரசிகர்களை அச்சமூட்டுகின்றன. டீசரும் இதேபோலே வசனமின்றி வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories