சினிமா

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா ‘ரஜினி 168’ ? - வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

சிறுத்தை சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா ‘ரஜினி 168’ ? - வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்திலான தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என பலர் நடித்து வருகின்றனர். தலைப்பு ஏதும் வைக்கப்படாததால் இப்படம் தலைவர் 168 என அழைக்கப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா ‘ரஜினி 168’ ? - வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு சிறுத்தை சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமானே இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பின் போது சிறிது நேரத்தைக் கூட வீணாக்காமல் படு சுறுசுறுப்பாக சிறுத்தை சிவா பணியாற்றி வருவதால் அவரது வேகம் படக்குழுவுக்கும் பெரும் உத்வேகத்தைத் தருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா ‘ரஜினி 168’ ? - வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்!

ஆகையால் எவ்வித தாமதமும் இன்றி இயக்குநர் சிவா விரைவில் படத்தின் வேலைகளை முடித்து விடுவார் என்பதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி 168-ஐ வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 2020ம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கிராமத்து பாணியிலான குடும்பப் படமாக தலைவர் 168 உருவாகி வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் கெட்டப் சமூக வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. அதில், ‘பேட்ட’ படத்தில் இருப்பது போன்று முறுக்கு மீசையில் இருப்பது போன்று ரஜினியின் தோற்றம் உள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இது தொடர்பாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories