சினிமா

செகண்ட் லுக் போஸ்டர், டீசர் ரிலீஸ் அப்டேட் என ரசிகர்களை கொண்டாட வைத்த ‘சூரரைப் போற்று’ படக்குழு!

சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியானதை அடுத்து ட்விட்டரில் ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

செகண்ட் லுக் போஸ்டர், டீசர் ரிலீஸ் அப்டேட் என ரசிகர்களை கொண்டாட வைத்த ‘சூரரைப் போற்று’ படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'காப்பான்' படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், சுதா கொங்கரா இயக்கத்திலான சூரரைப் போற்று படத்துக்கான எதிர்ப்பார்ப்பே அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை இயக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் மாரா கதாபாத்திரத்திற்கான தீம் பாடலே அவரே பாடியுள்ளார் என அண்மையில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மாரா தீம் அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று ‘சூரரைப் போற்று’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ‘பருந்தாகுது ஊர்க்குருவி வணங்காதது என் பிறவி’ எனும் வாசகம் அடங்கிய சூர்யாவின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. மேலும், படத்தின் டீசர் வருகிற ஜனவரி 7ம் தேதி வெளிவருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ‘சூரரைப் போற்று’ படம் ரிலீஸாகவுள்ளது.

செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸானதை அடுத்து ட்விட்டரில் #SooraraiPottruSecondLook என்ற ஹேஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

banner

Related Stories

Related Stories