சினிமா

#DarbarTrailer எப்போது? - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

தர்பார் ட்ரெய்லர் அறிவித்ததை அடுத்து ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்.

#DarbarTrailer எப்போது? - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியான தர்பார் படத்தின் ஆடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சும்மாகிழி என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனையடுத்து, படத்தின் ட்ரெய்லருக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தர்பார் படத்தின் ட்ரெய்லர் நாளை (டிச.,16) மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதனையடுத்து #DarbarTrailer & #DarbarThiruvizha என்ற ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories