சினிமா

ரஜினி பிறந்தநாள் பரிசாக வெளியாகிறதா 'தர்பார்' ட்ரெய்லர்? - சந்தோஷ் சிவன் சூசகம்!

'தர்பார்' படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி பிறந்தநாள் பரிசாக வெளியாகிறதா 'தர்பார்' ட்ரெய்லர்? - சந்தோஷ் சிவன் சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. இப்படத்தில், ஆதித்யா அருணாச்சலம் எனும் கதாபாத்திரத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை (டிச.,12) ரஜினியின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை அடுத்து, வாழ்த்து தெரிவித்துள்ள ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தர்பார் பட ட்ரெய்லர் நன்றாக இருப்பதாக ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, ரஜினியின் பிறந்த நாளையொட்டி நாளை ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories