சினிமா

24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் ஜோடி சேரும் கண்ணழகி நடிகை - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு !

‘ரஜினி 168’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கண்ணழகி நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் ஜோடி சேரும் கண்ணழகி நடிகை - சன் பிக்சர்ஸ் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘தர்பார்’ படத்தில் தன்னுடைய பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்திலான தன்னுடைய 168வது படத்துக்காக ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

தலைவர் 168 என அழைக்கப்பட்டுவரும் இந்தப் படத்தில் காமெடி நடிகர் சூரியை தவிர வேறு எவரெல்லாம் ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவும் அறிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று ரஜினி 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதல் முறையாக கீர்த்தி சுரேஷும், ரஜினியுடன் 21 ஆண்டுகளுக்கு பிறகு பிரகாஷ் ராஜும் நடிக்க இருக்கிறார் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

2020ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரஜினி 168 படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறப்படும் நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரஜினியின் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, எஜமான், வீரா, முத்து என அவருடன் ஜோடியாக நடித்த மீனா தற்போது ரஜினி 168ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள நடிகை மீனா, கலகலப்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் கண்ணழியாக வலம் வந்த மீனா, தற்போது ‘கரோலின் காமாக்‌ஷி’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடிக்க நடித்துவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories