சினிமா

‘விஜய் 64’ டைட்டில் ரிலீஸுக்கு முன்பே சாட்டிலைட் உரிமத்தைப் பெற்ற நிறுவனம் - லேட்டஸ்ட் தகவல்!

விஜய் 64 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

‘விஜய் 64’ டைட்டில் ரிலீஸுக்கு முன்பே சாட்டிலைட் உரிமத்தைப் பெற்ற நிறுவனம் - லேட்டஸ்ட் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தளபதி 64'. சென்னை, டெல்லி என படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்திருக்கிறது.

இதனையடுத்து, கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சிறைச்சாலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில், விஜய், விஜய் சேதுபதி மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் இடம்பெறும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இந்நிலையில், படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கூட அறிவிக்காத நிலையில் சாட்டிலைட் உரிமத்தை பெற்றிருப்பது சினிமா வட்டாரங்களிடையே பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

இந்தத் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் ரசிகர்களிடையே தூண்டி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

அண்மையில் டெல்லி ஷூட்டிங்கை முடித்ததும் தயாரிப்பாளரை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories