சினிமா

‘விஜய் 64’-ல் விஜய்யின் ஸ்டைலான லுக் : வைரலாகும் போட்டோ!

விஜய் 64 படத்தில் விஜய்யின் புது லுக் தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘விஜய் 64’-ல் விஜய்யின் ஸ்டைலான லுக் : வைரலாகும் போட்டோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிகில் படத்தை அடுத்து தனது 64வது படத்துக்காக ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தளபதி 64 / விஜய் 64 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். விஜய் 64 படத்தை 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, டெல்லி என விஜய் 64 படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் நடிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, அவரது ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேங்ஸ்டர் பின்னணியில் படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் 64 படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக கர்நாடகாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ஷூட்டிங் வேலைகள் முடிந்துள்ளதை அடுத்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவை விஜய் சந்தித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஸ்டைலிஷான கெட்டப்பில் விஜய் இருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories