சினிமா

குழந்தைகள் கொண்டாடும் ’ ‘Chill Bro’ : தனுஷின் பட்டாஸ் சிங்கிள் ட்ராக் ரிலீஸானது!

தனுஷ் நடித்து பாடியுள்ள பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது

குழந்தைகள் கொண்டாடும் ’ ‘Chill Bro’ : தனுஷின் பட்டாஸ் சிங்கிள் ட்ராக் ரிலீஸானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘அசுரன்’ படத்துக்கு நடிகர் தனுஷ் D40 படத்துக்காக கார்த்திக் சுப்புராஜுடனும், பட்டாஸ் படத்துக்காக துரை செந்தில்குமாருடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜுடனான D40 படத்தின் ஷூட்டிங் வேலைகள் லண்டனில் முடிந்ததை அடுத்து சென்னை திரும்பிய நிலையில் துரை செந்தில்குமாரின் பட்டாஸ் பட வேலைகளையும் நடிகர் தனுஷ் முடித்துள்ளார்.

இந்நிலையில், பட்டாஸ் படத்தில் தனுஷ் பாடியுள்ள Chill Bro என்ற பாடல் டிச.,01 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.

அதனையடுத்து, நேற்று மாலை நடிகர் தனுஷ் தான் பாடி நடித்துள்ள பட்டாஸ் படத்தின் Chill Bro பாடலை ட்விட்டரில் வெளியிட்டார். குழந்தைகள் உள்ளிட்ட பலரையும் ஈர்த்துள்ள தனுஷின் சில் ப்ரோ பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதோடு தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

பட்டாஸ் படத்துக்கு விவேக் - மெர்வின் இணைந்து இசையமைத்துள்ளனர். கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்சாடா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories