
தர்பார் படத்துக்கு பிறகு சிறுத்த சிவாவின் இயக்கத்தில் தனது 168வது படத்துக்காக ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
குடும்பப் பாங்கான படமாக உருவாக்கப்படவுள்ளதால் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் என இரட்டை நாயகிகள் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், படக்குழு தரப்பில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும், தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினியுடன் முதல் முதலாக நடிக்க நடிகர் சூரியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன் தினம் தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருந்து.
இதற்கிடையில், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீசான விஸ்வாசம் படத்தின் பாடல்கள் ஹிட்டானதை அடுத்து ரஜினி 168 படத்துக்கும் இமான் இசையமைக்கவுள்ளார்.
இவ்வாறு இருக்கையில், தர்மத்தின் தலைவன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை என ரஜினியுடன் ஜோடி சேர்ந்த நடித்த குஷ்பு ரஜினி 168ல் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் வில்லி கதாப்பாத்திரமாக இருக்கக் கூடும் எனவும் பேசப்படுகிறது.








