சினிமா

‘ரஜினி 169’ படத்தை இயக்குகிறாரா ஸ்டைலிஷ் இயக்குநர்? - கோலிவுட் வட்டாரத்தில் தீயாய்ப் பரவும் தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ரஜினி 169’ படத்தை இயக்குகிறாரா ஸ்டைலிஷ் இயக்குநர்? - கோலிவுட் வட்டாரத்தில் தீயாய்ப் பரவும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தர்பார் படத்தின் பணிகளை முடித்ததை அடுத்து தனது 168வது படத்துக்காக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். விஸ்வாசம் பட பாடல் வெற்றியை அடுத்து ரஜினி 168 படத்துக்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் நடிப்பவர்கள் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும், ரஜினி 168ல் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜோதிகா நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், சிறுத்தை சிவாவின் வழக்கமான பாணியான குடும்பம் சார்ந்த படமாகவே ரஜினி 168 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரஜினி 169’ படத்தை இயக்குகிறாரா ஸ்டைலிஷ் இயக்குநர்? - கோலிவுட் வட்டாரத்தில் தீயாய்ப் பரவும் தகவல்!

இந்நிலையில், சிறுத்தை சிவா உடனான படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பல்வேறு சிக்கலில் மூழ்கி இருந்த தனுஷின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை வெளியிட உதவி செய்தவர் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ். அதனைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்தின் பேனரில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

banner

Related Stories

Related Stories