சினிமா

நானே சொல்றேன்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யோகிபாபு!

என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

நானே சொல்றேன்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யோகிபாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வரும் யோகிபாபு அவ்வபோது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாக கூறி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது.

நானே சொல்றேன்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யோகிபாபு!

பலர் யோகிபாபுவுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது என யோகி பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories