சினிமா

“மிமிக்ரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்" - 'விஜய் 64' பிரபலம் நெகிழ்ச்சி!

லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி ஆடை பட இயக்குநரின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்தியது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

“மிமிக்ரி செய்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்" - 'விஜய் 64' பிரபலம் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் குரலில் பேசி ஆடை பட இயக்குநரின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்தியது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64வது படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் சென்னையில் முடிவடைந்ததை அடுத்து டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ் எனப் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 2020 கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும், விஜய்யின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், விஜய் 64ல் கதாசிரியராக ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்ன குமார் பணியாற்றி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜின் செல்போனில் இருந்து ரத்ன குமாருக்கு கால் செய்து "Machi Happy Birthday Da" என லோகேஷை போல் மிமிக்ரி செய்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார். இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரத்ன குமார், “Worthu living” எனப் பதிவிட்டுள்ளார்.

பெரும்பாலும் விஜய் பொது விழாக்களில் அமைதியாக இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர். ஷூட்டிங்கில் அவ்வப்போது சில சேட்டைகளிலும் ஈடுபடுவார். இதுபற்றி அவருடன் பணியாற்றிய இயக்குநர்கள், படக்குழுவினர் சொல்வதை அறிந்திருந்தாலும், லோகேஷ் கனகராஜைப் போல பேசி ரத்ன குமாரை வாழ்த்தியதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆச்சரியத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories