சினிமா

விஜய் 64 ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பகிர்ந்த ‘பவி டீச்சர்’ : வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!

யூடியூப் பிரபலமான ப்ரிகிதா பகிர்ந்த ‘விஜய் 64’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் 64 ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பகிர்ந்த ‘பவி டீச்சர்’ : வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‘விஜய் 64’ படத்தின் ஷூட்டிங். இப்படத்தில், விஜய், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ப்ரேம், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்த மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லி ஷெட்யூலில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

டெல்லியில் மேற்குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமல்லாமல் மலையாள நடிகையான லின்டு ரோனி, யூடியூப் பிரபலம் ப்ரிகிதா, சவும்யா என பலரும் நடித்து வருகின்றனர்.

இதில், யூடியூப் சேனல் ஒன்றின் வெப் சீரிஸில் நடித்துவரும் ப்ரிகிதாவின் ‘பவி டீச்சர்’ கேரக்டர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

தற்போது இவர் விஜய் 64ல் இணைந்ததற்கு ப்ரிகிதாவின் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லி ஷூட்டிங்கின்போது உடன் நடிக்கும் நடிகைகளுடன் ப்ரிகிதா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பவி டீச்சரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories