சினிமா

கார்த்தி, ஜோதிகா முதன் முதலில் இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் வெளியானது (வீடியோ)

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் கார்த்தி, ஜோதிகா நடித்திருக்கும் தம்பி படத்தின் டீசர் வெளியானது

கார்த்தி, ஜோதிகா முதன் முதலில் இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் வெளியானது (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சவுகார் ஜானகி என பலர் நடிக்கும் படத்தின் பெயர் தம்பி. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டனர்.

வையாகாம் 18, பேர்லல் மைண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசரை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தின் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடித்துள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற டிசம்பர் மாதம் ரிலீசாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் படத்தை டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. கார்த்தியின் தம்பி படத்துக்கு 96 பட பிரபலம் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories