சினிமா

தொடர்ந்து புதுப்புது சாதனைகளைப் படைத்து வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ : அடிச்சு தூக்கும் ரசிகர்கள்!

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் ரிலீஸாகி 10 மாதங்கள் ஆகியும் சாதனை தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து புதுப்புது சாதனைகளைப் படைத்து வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ : அடிச்சு தூக்கும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் படங்கள் குறித்த அறிவிப்புகளோ அல்லது அவரது செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வந்தாலோ அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி ட்ரெண்ட் செய்வதில் அஜித் ரசிகர்கள் முன்னணியில் இருப்பார்கள்.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது ‘விஸ்வாசம்’ படம். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தொடர்ந்து 4வது படமாக இது உருவானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இதில், நயன்தாரா, விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

தொடர்ந்து புதுப்புது சாதனைகளைப் படைத்து வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ : அடிச்சு தூக்கும் ரசிகர்கள்!

தந்தை மகள் உறவை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் குடும்ப ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்து பட்டித்தொட்டி எங்கும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. படம் ரிலீஸாவதற்கு முன்பிருந்தே படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து விஸ்வாசம் படம் தொடர்பான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். படம் வெளியான பிறகும் அதனை ட்ரெண்ட் செய்யத் தவறவில்லை அஜித் ரசிகர்கள்.

வசூல் மற்றும் விமர்சன ரீதியில் சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம் படம் தற்போது மற்றொரு பரிமாணத்தையும் எட்டியுள்ளது. அதாவது, இந்தியாவில் 2019ம் ஆண்டில் மிகப்பெரிய தாக்கத்தையும், வைரலையும் ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது ட்விட்டர். அதில், நாடாளுமன்றத் தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகியவற்றை மிஞ்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது #Viswasam ஹேஷ்டேக்.

தொடர்ந்து புதுப்புது சாதனைகளைப் படைத்து வரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ : அடிச்சு தூக்கும் ரசிகர்கள்!

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் வழக்கம்போல் தங்களது ட்ரெண்டிங் வித்தையை ட்விட்டரில் காட்டத் தொடங்கியதில் மீண்டும் #Viswasam மற்றும் #ViswasamTopsInfluentialMoment என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories