சினிமா

சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய டி.இமான்... பாடகரான நொச்சிப்பட்டி திருமூர்த்தி - எந்தப் படத்தில் தெரியுமா?

சமூக வலைதளம் மூலம் தனது பாடல் திறமையை வெளிப்படுத்திய பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி சினிமாவில் பாடகராக அறிமுகமாகவுள்ளார்.

சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய டி.இமான்... பாடகரான நொச்சிப்பட்டி திருமூர்த்தி - எந்தப் படத்தில் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே...’ பாடலை பாடி அசத்திய மாற்றுத்திறனாளி சிறுவன் திருமூர்த்தியின் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவை பகிர்ந்த அஜித் ரசிகர் ஒருவர், திருமூர்த்திக்கு சினிமாவில் பாட வாய்ப்புத் தருமாறு வலியுறுத்தி இசையமைப்பாளர் டி.இமானை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையறிந்த இமான், விரைவில் திருமூர்த்தியை சினிமாவில் பாட வைப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகிவரும் ‘சீறு’ படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாட பார்வை மாற்றுத்திறனாளியான திருமூர்த்திக்கு வாய்ப்பளித்துள்ளார் இமான்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தம்பி நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி” என இமான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியும் தற்போது இணையத்தில் வைரலாக, பலர் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் என இமானை பாராட்டியும், திருமூர்த்திக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories