சினிமா

“10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பேட்டி கொடுக்கிறேன்.. ஏன் தெரியுமா?” - நயன்தாரா ‘பளிச்’ பதில்!

“சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன்” என பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை நயன்தாரா.

“10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பேட்டி கொடுக்கிறேன்.. ஏன் தெரியுமா?” - நயன்தாரா ‘பளிச்’ பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நாயகியாக வலம்வரும் நயன்தாரா ‘Vogue' ஆங்கில இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டிக்காக நடத்தப்பட்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பல ஆண்டுகளாக இதழ்களுக்கு பேட்டி தராமல் இருந்துவந்த நயன்தாரா இந்தப் பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் நயன்தாரா கூறியிருப்பதாவது, “நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நீங்கள் மற்ற நடிகர்களின் படங்களில் ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர். சில நேரங்களில் என்னையும் மீறி அப்படி நடிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.

“10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பேட்டி கொடுக்கிறேன்.. ஏன் தெரியுமா?” - நயன்தாரா ‘பளிச்’ பதில்!

கவர்ச்சியாக நடிக்கமுடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கமுடியும். சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பேன். சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன்.

வெற்றியை எப்போதும் எனது தலையில் ஏற்றிக்கொண்டது இல்லை. எப்போதும் ஒருவிதமான பயத்தில்தான் இருக்கிறேன். நான் நடித்தது சரியான படமாக இருக்காதோ என்ற பதற்றமும் இருக்கும். என்னை ஏளனம் செய்பவர்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுக்கிறேன்.

“10 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பேட்டி கொடுக்கிறேன்.. ஏன் தெரியுமா?” - நயன்தாரா ‘பளிச்’ பதில்!

இந்த உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவது இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பதை இந்த உலகமும் அறியவேண்டாம். நான் தனிமை விரும்பி. எனது சில பேச்சுகள் தவறாகத் திரித்து வெளியிடப்பட்டதால் 10 ஆண்டுகளாக பேட்டி அளிக்காமல் விலகியே இருக்கிறேன்.

சினிமாவில் நடிப்பது மட்டும்தான் எனது வேலை. அதை சரியாகச் செய்து பெயர் வாங்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

banner

Related Stories

Related Stories