சினிமா

“தூக்குதுரை தீமை தூக்கிய இந்தி படம்” - இசையமைப்பாளர் டி.இமான் கதறல்!

அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் தீம் மியூசிக்கை அனுமதி இல்லாமல் இந்தி படத்தில் பயன்படுத்திவிட்டதாக ட்வீட் செய்துள்ளார் இசைமைப்பாளர் டி.இமான்.

“தூக்குதுரை தீமை தூக்கிய இந்தி படம்” - இசையமைப்பாளர் டி.இமான் கதறல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் தீம் மியூசிக்கை அனுமதி இல்லாமல் இந்தி படத்தில் பயன்படுத்திவிட்டதாக ட்வீட் செய்துள்ளார் இசைமைப்பாளர் டி.இமான்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் `விஸ்வாசம்’. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் பணியாற்றினார். அவர் இசையமைத்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக அமைந்தது.

அதிலும் ‘விஸ்வாசம்’ படத்துக்கான தீம் மியூசிக் மிகப் பிரபலமானது. இப்போது இதே இசையை பாலிவுட் படமான `மர்ஜாவான்’ படத்தின் ட்ரெய்லரில் எந்த அனுமதியும் கேட்காமல் பயன்படுத்தியிருப்பதை பற்றி ட்வீட் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.


ரிதேஷ் தேஷ்முக், வருண் தவான், தாரா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள `மர்ஜாவான்’ படத்தை மிலாப் ஸாவேரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. கூடவே அதில் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தி, ட்ரெய்லருக்கு இசையமைத்தது இமான் என யூ-ட்யூபில் பதிவு செய்யப்பட்டிருந்தது.


ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தான் இசையமைத்த தீம் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்த இமான், “விஸ்வாசம் படத்துக்கு நான் அமைத்த பின்னணி இசை மர்ஜவான் இந்தி படத்தின் ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அந்தப் பட தயாரிப்பு நிறுவனமோ, ஆடியோ நிறுவனமோ என்னிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை” என ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து, அஜித் ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் ‘மர்ஜாவான்’ படக்குழுவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories