சினிமா

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..? : கோமாளி விமர்சனம்! #ComaliReview

16 வருடங்கள் கோமாவில் இருந்துவிட்டு மீண்டு வரும் ஹீரோ, இந்த உலகை எதிர்கொள்வதும் அதில் அவர் சந்திக்கும் சிக்கலும், இழந்ததை மீட்பதுமே ‘கோமாளி’ படத்தின் கதை.

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..? : கோமாளி விமர்சனம்! #ComaliReview
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இயக்கம் : பிரதீப் ரங்கநாதன்
நடிகர்கள் : ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஆடுகளம் நரேன்
இசை : ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன்
எடிட்டிங் : பிரதீப் இ.ராகவ்

16 வருடங்கள் கோமாவில் இருந்துவிட்டு மீண்டுவரும் ஹீரோ, இந்த உலகை எதிர்கொள்வதும் அதில் அவர் சந்திக்கும் சிக்கலும், இழந்ததை மீட்பதுமே படத்தின் கதை.

1990களின் இறுதியில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் ரவி (ஜெயம் ரவி). இவருடன் படிக்கும் நெருக்கிய நண்பன் மணி (யோகிபாபு). அதே வகுப்பில் படிக்கும் நிகிதாவை (சக்யுக்தா) காதலிக்கிறார் ரவி. 1999, டிசம்பர் 31ல் நிகிதாவிடம் காதலைச் சொல்லும் ரவி, அப்போது நடக்கும் விபத்து ஒன்றினால், கோமாவுக்குச் சென்றுவிடுகிறார். 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீளும் நாயகனின் வாழ்க்கையே மீதிக்கதை.

வித்தியாசமான கதைக்கரு. 16 வருட கோமாவுக்குப் பிறகான ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்கிற ஒன்லைனை எடுத்த விதத்திற்கே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை பாராட்டலாம். நாஸ்டால்ஜிக்காக நிறைய விஷயங்களை சேர்த்த விதத்தில், எந்த இடத்திலும் போரடிக்காமல் கதை நகர்கிறது.

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..? : கோமாளி விமர்சனம்! #ComaliReview

சிறுவயது கேரக்டரில் க்ளீன் ஷேவ் ரவியாகவும், 16 வருடத்துக்குப் பிறகு தாடி வைத்த ரவியாகவும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஜெயம் ரவி. நடிப்பில் எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல், அவரது பெஸ்டை கொடுத்திருக்கிறார். கோமாவுக்குப் பிறகு, சிறுவயது குணத்தைப் பிரதி எடுப்பது, புதிதாக எதையாவது செய்யப்போய் மாட்டிக் கொள்வது, இயலாமையை வெளிப்படுத்துவது என ஜெயம்ரவி நன்றாகவே பொருந்திப் போகிறார்.

பொதுவாக காமெடி டிராக்கில் மட்டும் வரும் யோகிபாபு, இந்தப் படத்தில் நீண்ட கேரக்டர் ரோல் செய்திருக்கிறார். அதிகமாக ‘பாடி ஷேமிங்’ காமெடிகளில் நடிக்கும் இவர், இந்த முறை அப்படியான ஒன்றை முயற்சிக்காமல் ரசிகர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார். தன்னையோ, பிறரையோ உடலளவில் கலாய்த்துக் கொண்டு வரும் காமெடிகள் அதிகமாக முகம் சுழிக்கவே வைக்கும். ஒரு இடத்தை தவிர, அப்படியான காமெடிகளை இந்தப் படத்தில் யோகிபாபு முயற்சிக்கவில்லை.

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..? : கோமாளி விமர்சனம்! #ComaliReview

படத்தில் மூன்று நாயகிகள் முக்கிய கேரக்டர்களில் வருகிறார்கள். ஜெயம் ரவியின் தங்கையாக வரும் ஆர்.ஜே.ஆனந்திக்கு, இப்படம் சர்ப்ரைஸ் கிஃப்ட். கிடைத்த இடத்தில் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஓவர் எமோஷனல் சீனில் மட்டும் கொஞ்சம் சந்திரமுகியாக மாறிவிடுவது தெரிகிறது. ஜெயம் ரவியின் முன்னாள் காதலியாக வரும் சக்யுக்தா இடம்பெறும் காட்சிகள் க்யூட்.

16 வருடங்கள் கழித்து ஜெயம் ரவியை பார்க்கும் இடம், சிலை திருடச் செல்லும் இடத்தில் முழிப்பது, ரவியுடனான ரொமான்ஸ், சின்ன வயசு ரோல் என அழகாக நிறைகிறார். மெயின் லீடான காஜல் அகர்வாலுக்கு பெரிதாக எந்த ரோலும் இல்லை. தங்கையின் தோழியா, மியூசியம் அதிகாரியா, யூடியூப் சேனலில் பணிபுரிகிறாரா எனக் குழப்பிவிடுகிறார்.

2016ல் கோமாவிலிருந்து ஜெயம் ரவி விழித்துக் கொள்கிறார். படத்தில் சென்னை வெள்ளம் தொடர்பான ஒரு காட்சி வருகிறது. ஆனால், சென்னை வெள்ளம் 2015ல் தான் வந்தது. அதுபோல, ரஜினி அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி 2017ம் ஆண்டின் இறுதியில் வந்த செய்தி. இப்படியான முன்பின் முரணாக தகவலுடன் கதையைச் சொல்லியிருக்கிறார் பிரதீப். இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..? : கோமாளி விமர்சனம்! #ComaliReview

ஆபாசமான வாழைக்காய் பஜ்ஜி சீன், இரண்டு இடங்களில் வருகிறது. இப்படியொரு காட்சி இருந்தும், படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பது நிச்சயம் அதிர்ச்சிக்குரிய ஒன்றே.

வில்லன் கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமார் ரோல் நச். அவருக்கு எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டும் சரி, அவர் நடித்த காட்சிகளும் சரி இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. அதுபோல, சில காட்சிகள் என்றாலும் வினோதினியின் நடிப்பும் ஓகே. அதுபோல தந்தையாக ஆடுகளம் நரேன், வாட்ச்மேனாக பிஜிலி ரமேஷ், டாக்டராக ஷாரா, ஏரியா ரவுடி பொன்னம்பலம் எல்லோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

கோமாவில் இருந்து மீளும் ஒருவன் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஒன்லைனைப் பிடித்திருந்தால் படம் வேற லெவலுக்கு சென்றிருக்கும். இதில் படத்தின் டிராக்கில் நிறைய குழப்பம். 90’ கிட் என்பதால், குழந்தைகளுடன் விளையாடித்திரிவது, டை கட்டிக் கொண்டு வேலை தேடிச் செல்வது, திடீரென சிலை கடத்தலில் இறங்குவது, இதற்கு நடுவே யூடியூப் நட்சத்திரமாக மாறிவிடுவது என ஒரு ஹீரோவுக்கு ஒரே படத்தில் இத்தனை பாத்திரங்களா என மலைக்கவைக்கிறது. #என்னடா_பண்ணி_வெச்சிருக்கீங்க என்று அவர்கள் பாணியிலேயே கேட்கத் தோன்றுகிறது.

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..? : கோமாளி விமர்சனம்! #ComaliReview

90-கள் மற்றும் மில்லினியம் என இரண்டு விதமான காலகட்டத்தை தனித்துவமாக ஒளிப்பதிவு செய்த விதத்தில் ரிச்சர்ட் எம்.நாதனுக்கும், சிக்கல் இல்லாத பாடல்களைத் தந்த விதத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கும் பாராட்டுகள்.

படம் முழுக்க பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்திருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் மைனஸாகவும் மாறுகிறது. எதற்கெடுத்தாலும் அறிவுரை, க்ளிஷேவான சினிமாலஜி சீன்கள் படத்தை காப்பாற்றியிருக்கிறது’ ஆனால் ஈர்க்கவில்லை. மொத்தத்தில் கோமாளி... என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க?!

banner

Related Stories

Related Stories