சினிமா

“மடி சாயும் மனைவியே பொய் கோப புதல்வியே” - ரசிகர்களை மயக்க ரிலீசானது நேர்கொண்ட பார்வையின் “அகலாதே” பாடல்

நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடல் இணையத்தில் வெளியானதை அடுத்து காதல் ஜோடிகளும், அஜித் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

“மடி சாயும் மனைவியே பொய் கோப புதல்வியே” - ரசிகர்களை மயக்க ரிலீசானது நேர்கொண்ட பார்வையின் “அகலாதே” பாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித் வழக்கறிஞராக நடித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இதில், அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். தமிழில் வித்யாவுக்கு இது முதல் படம். படத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே என பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர இருப்பதாக தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

“மடி சாயும் மனைவியே பொய் கோப புதல்வியே” - ரசிகர்களை மயக்க ரிலீசானது நேர்கொண்ட பார்வையின் “அகலாதே” பாடல்

இந்நிலையில், படத்தின் ஒவ்வொரு பாடல்களையும் படக்குழு அதற்கேற்ற போஸ்டர்களுடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் - வித்யாபாலன் காம்போவில் இடம்பெற்றுள்ள அகலாதே என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக போனி கபூர் அறிவித்திருந்தார்.

அதேபோல், இன்று மாலை யுவனின் வசீகரிக்கும் குரலிலும், இசையிலும் உருவாகியுள்ள அகலாதே பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அஜித் மற்றும் யுவன் ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்தும், கொண்டாடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் ஸ்டில்ஸ் அதிகாரப்பூர்வமாக ரிலீசானதை அடுத்து ட்விட்டரில் #Darbar மற்றும் #Agalaathey ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories