சினிமா

நீங்க என்ன லீக் பண்றது..? : அதிகாரப்பூர்வமாகவே ‘தர்பார்’ புகைப்படங்களை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

நீங்க என்ன லீக் பண்றது..? : அதிகாரப்பூர்வமாகவே ‘தர்பார்’ புகைப்படங்களை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேட்ட படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சந்திரமுகி படத்துக்குப் பிறகு ரஜினியுடன் இப்போதுதான் நடிக்கிறார் நயன்தாரா.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா, தர்பார் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இதில், ரஜினி காவல்துறை உயரதிகாரியாக நடித்து வருகிறார்.

நீங்க என்ன லீக் பண்றது..? : அதிகாரப்பூர்வமாகவே ‘தர்பார்’ புகைப்படங்களை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!

படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, நயன்தாரா, யோகிபாபு இருக்கும் தர்பார் படத்தின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது லீக் ஆவதால் படக்குழு ஆழ்ந்த அதிர்ச்சிக்கு ஆளானது. அண்மையில் கூட ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியானது.

இந்த நிலையில், இதுபோன்று ஷூட்டிங் படங்கள் வெளியாவதை தடுக்கும் விதமாக ரஜினியின் தர்பார் பட கெட்டப்பின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சரியாக மாலை 7 மணிக்கு தர்பார் பட கெட்டப்பில் உள்ள ரஜினியின் இரண்டு HD புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

banner

Related Stories

Related Stories