சினிமா

35 வருட திரை வாழ்க்கை.. 500 அடிக்கு போஸ்டர்.. மதுரையை கலக்கும் சிம்பு ரசிகர்கள் !

நடிகர் சிம்புவுக்காக மதுரை மாட்டுத்தாவணியில் 500 அடி நீளத்துக்கு போஸ்டர் ஒட்டி சிறப்பித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

35 வருட திரை வாழ்க்கை.. 500 அடிக்கு போஸ்டர்.. மதுரையை கலக்கும் சிம்பு ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘உறவை காத்த கிளி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் சிம்பு என்கிற சிலம்பரசன்.

1984ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நடிகர் சிம்புவின் திரைவாழ்வு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் “மதுரை சிட்டி STR வெறியர்கள்” ரசிகர் மன்றம் சார்பாக 500 அடி நீளத்துக்கு சிம்புவின் குழந்தை கதாப்பாத்திரம் முதல் ஹீரோ வரையிலான அனைத்து படங்களின் புகைப்படங்களையும் போஸ்டராக ஒட்டி தெறிவிக்கவிட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாது, ட்விட்டரில் #35YearsOfSimbuism , #35YearsOfSTRism என்ற ஹேஷ்டேகில் வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகர் விஜய் 440 அடிக்கு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதனை மிஞ்சும் அளவுக்கு சிம்பு ரசிகர்கள் 500 அடிக்கு போஸ்டர் ஒட்டியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories