சினிமா

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய சினிமாவின் சமீபத்திய ஹாட் டாக் அப்டேட்ஸ் சில...

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. மீண்டும் சமுகவலைதளங்களில் லீக்காகும் ‘தர்பார்’ போட்டோக்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்துக்கான ஷூட்டிங் மும்பையில் பரபரப்பாக நடந்துவந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் லீக்காகி வைரலானது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டன.

ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு மகளாக நிவேதா தமாஸ் நடிக்க யோகிபாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீப நாட்களாக மும்பையில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஷூட்டிங் டெல்லிக்கு மாற்றப்பட்டிருந்தது.

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!

இந்த நிலையில் மறுபடியும் இந்தப் படத்தின் புகைப்படங்கள் லீக்கானது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படங்களில் ரஜினி மும்பை காவல் அதிகாரியுடன் காரில் செல்லும்படியான சீன் இருந்தது. இது ரஜினி போலீஸாக நடிப்பதை உறுதிசெய்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

2. தந்தையின் வாழ்கையை படமாக்க இருக்கும் விஷ்ணு விஷால்!

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு நாயகனாக அறிமுகமானார் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளியான படங்களுக்கு போதுமான வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. கடந்த வருடம் வெளியான ‘ராட்சசன்’ படம் இவரது நடிப்பில் வெளியான இணைந்து ஒரு படம் பெயர் வைக்காத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது தந்தையைப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!

அதில் 32 வருடங்களாக பொதுப்பணியில் இருந்த எனது அப்பாவும் போலீஸ் அதிகாரியுமான குடவ்லா ஐ.பி.எஸ் இப்போது ஓய்வெடுத்திருக்கிறார். அவரது இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த கடவுளுக்கும் உடன் வேலை செய்தவர்களுக்கும் நன்றி சொல்லி, அவரது குணங்களில் 10 சதவீதமாவது எனக்கு இருக்கவேண்டும், அவரைப் பற்றிய நிறைய விஷயங்களை சினிமா மூலமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன் எனச் சொல்லியிருக்கார். இதன் மூலமாக அவரது தந்தையின் வாழ்க்கையை விஷ்ணு விஷால் திரைப்படமாக்குவார் என்பது தெளிவாகியிருக்கிறது.. ஆனால் இது தொடர்பான மற்ற எந்த தகவலும் இப்போதைக்கு வெளியாகவில்லை.

3. ஜூலை 12ல் வெளியாகும் சந்தீப் கிஷனின் கண்ணாடி!

2014-ல் தினேஷ் நடிப்பில் வெளியான ‘திருடன் போலீஸ்’ படம் மூலமாக டைரக்டராக தனது எண்ட்ரியைக் கொடுத்தார் கார்த்திக் ராஜு. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் போதுமான வசூல் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த பட வாய்ப்பு இங்கு கிடைக்காத நிலையில், டோலிவுட்டுக்கு போன இவருக்கு சந்தீப் கிஷனின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் என்பதால் இந்தப் படத்தை இரண்டு மொழிகளிலும் படமாக்க முடிவு செய்து, தமிழில் ‘கண்ணாடி’ எனவும் தெலுங்கில் ‘Ninu Veedani Needanu Nenu' எனவும் டைட்டில் அறிவிக்கப்பட்டது.

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!

ஷூட்டிங் பணிகள் முடிந்து இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில, இப்போது படத்தின் ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து படத்தை வரும் ஜூலை 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அனயா சிங் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். மேலும், டைரக்டர் கார்த்திக் நரேன், கருணாகரன், ஆனந்தராஜ், முரளி ஷர்மா, பூர்ணிமா பாக்யராஜ், பிரகதி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

4. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் வசூலை மிஞ்சும் அதன் ரீமேக்!

டோலிவுட் ரசிகர்களால் செல்லமாக ரவுடி என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியாகி பெரிய ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்த இந்த படத்துக்கு தென்னிந்தியா முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்வதற்கான வேலைகள் தொடங்கி இப்போது அந்தப் படம் இந்தியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!

பாலிவுட்டிலும் இந்தப் படத்தை சந்தீப் வங்கா இயக்கியிருந்தார். ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானி லீட் ரோல்களில் நடித்திருக்கும் இந்த ரீமேக் படத்துக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 21-ம் தேதி வெளியான இந்தப் படம் இதுவரை 147 கோடி வசூல் செய்துள்ளது. விரைவாகவே 150 கோடியைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான காதல் கதையைக் கொண்ட ‘கபீர் சிங்’ படத்துக்கு பாலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்தது போலவே தமிழ் ரசிகர்களும் கொடுப்பார்களா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். தமிழில் இதன் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடித்திருக்கிறார். ‘ஆதித்ய வர்மா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை கடந்த மாதமே ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. சீக்கிரமே இந்தப் படமும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

5. ‘தங்கல்’ ஹீரோயினின் அதிரடி முடிவு!

பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் 2016-ல் வெளியாகி உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற படம் தான் ‘தங்கல்’. 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து அசத்தியிருந்தார் சாய்ரா வாஸிம். இந்தப் படம் மூலமாக அவருக்கு சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய விருதுகளும் இவரைத் தேடிப் போக ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் இன்னொரு பக்கம் தீராத மன அழுத்தத்துக்கும் தள்ளப்பட்டுள்ளார் சாய்ரா. இதனால் சமூக வலைதளங்களில் தான் நிம்மதியில்லாமல் இருப்பதாக பல பதிவுகளை வெளியிட்டு வந்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு தனது மதத்தையும் அவர் காரணம் காட்டியுள்ளது தான் இப்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினி அப்டேட்ஸ் 5: ‘தங்கல்’ ஹீரோயின் எடுத்த அதிரடி முடிவு.. ஒரிஜினலை மிஞ்சும் ரீமேக் வசூல்!

இவரது நடிப்பில் வெளியான ‘தங்கல்’, ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் இரண்டுமே 1,000 கோடி வசூல் ஈட்டிய படமென்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இவரது நடிப்பில் தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படம் திரைக்கு வர இருக்கிறது.

banner

Related Stories

Related Stories