சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!

'அடங்கமறு' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

'அடங்கமறு' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, நிதின்சத்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ஜே,ஆர் 24' என தற்காலிகமாக தலைப்பிடப்பட்ட இந்த படத்திற்கு 'கோமாளி' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது "இது, ஜெயம் ரவி நடிக்கும் 24வது படம். இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். குறிப்பிட்ட 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories