சினிமா

இந்தியன்-2 ட்ராப் ஆனதால் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதையை இயக்குகிறாரா ஷங்கர்?

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 பட தயாரிப்பு பணியில் இருந்து லைகா நிறுவனம் விலகியதாக தகவல்

இந்தியன்-2 ட்ராப் ஆனதால் 10 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதையை இயக்குகிறாரா ஷங்கர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் இரண்டாம் பாகம் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.

கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை பிரமாண்டமாக தயாரித்து வந்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா. ஆனால், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கமல் அரசியல் பக்கம் திரும்பியதால் மீதி படத்தின் தயாரிப்பு வேலைகளில் இருந்து லைகா நிறுவனம் விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, லைகா நிறுவனம் விலகியதால் இந்தியன் 2 படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிற்காக ஒரு கதையை இயக்குநர் ஷங்கர் தயார் செய்திருந்ததாகவும், அந்த கதையை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதால், அந்த கதையை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆகவே, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடைபெற்றால், விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சினிமா திருவிழாவாகவே இது அமையும்.

banner

Related Stories

Related Stories