சினிமா

அவதூறு பேசுபவர்கள் பற்றி கவலை படாதீர்கள் - ராகவா லாரன்ஸ் 

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்’ என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

அவதூறு பேசுபவர்கள் பற்றி கவலை படாதீர்கள் - ராகவா லாரன்ஸ் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடிகர் தன்னை மறைமுகமாக விமர்ச்சிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சீமான், ராகவா லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்து இருந்தார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ராகவா லாரன்ஸை கடுமையாக விமர்ச்சித்தர். இதனையடுத்து, சுரேஷ் காமாட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'காஞ்சனா 3' படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள். எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மும்பையில் 'காஞ்சனா' இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories