சினிமா

தெலுங்கு படத்தில் வில்லனாகும் விஜய் சேதுபதி  

வித விதமான கெட்டப்புகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi
Vijay Sethupathi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வித விதமான கெட்டப்புகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.தற்போது,மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் மூலம் தெலுங்கிலும் கால் பதித்திருக்கிறார்.

தெலுங்கு படத்தில் வில்லனாகும் விஜய் சேதுபதி  

இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படத்தை ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாரின் அசோசியேட், புஜ்ஜி பாபு சனா இயக்குகிறாராம்.

அவர் கதை சொல்லிய விதம் பிடித்து விடவே, படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி. இதில் வைஷ்ணவ் தேஜ், மனீஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து, சுகுமார் இதனை தயாரிக்கிறார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories