உலகம்
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது.
மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.
இதனிடையே காசா பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின்படி, காசா மக்களை தெற்கு பகுதிக்கு இடம்பெயர வைத்து, வடக்கு காசாவை முழுவதுமாக காலவரையின்றி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசா நகரின் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது. மேலும் காசாவில் இருப்பவர்கள் அதன் தென்பகுதிக்கு செல்லுமாறும் இஸ்ரேல் அறிவித்தது. இஸ்ரேலின் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது காசா நகரத்தின் 40 விழுக்காடு பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஹதிஃபா கலோ என்பவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி முழு காசா நகரையும் கைப்பற்றப்போவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!