உலகம்
8 கார்கள் - 7 நகரங்கள் : விமானக் கட்டணத்தைத் தவிர்க்க சீன இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்!
சீனாவில், அடுத்தடுத்து கார்கள் திருடுபோவதாக போலிஸாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. இது குறித்து போலிஸார் தங்களது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
ஹெபெய் மாகாணத்தில், சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சாலையின் ஓரமாக இருந்துள்ளது. இதற்குள் இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது மேலும் சந்தேகம் எழுந்தது. மேலும் அவர் பயன்படுத்திய கார், காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் வந்ததும் போலிஸார் கவனத்திற்கு வந்துள்ளது.
உடேன, அந்த இளைஞரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷாவுக்கு செல்ல விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதிக பணம் செலவு ஆகும் என்பதால் அவருக்கு ஒரு யோசனை தோற்றியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாகாணத்திலும் கார்களை திருடி எரிபொருள் தீர்ந்ததும், காரை அங்கியே நிறுத்திவிட்டு வேறுகாரை திருடி சென்றுள்ளார். இப்படி 8 கார்களை வரை அவர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சீன சட்டத்தின்படி கார்களை திருடினால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை உள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!