உலகம்
இஸ்ரேலை தாக்கிய லெபனான் : போருக்கான சிவப்பு கொடியை ஏற்றிய ஈரான்... உக்கிரமாகும் மத்திய கிழக்கு போர் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதோடு ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லை நாடான லெபனானை சேர்ந்த ஹஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபுவாட் ஷுக்கரை ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்தது. இதற்கு பதிலடி தரப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஏராளமான ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது.
அதே நேரம் ஈரான் மண்ணில் வைத்து கொல்லப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே வின் கொலைக்கு பழிவாங்கப்படும் என ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஈரானிலுள்ள ஜம்கறான் மசூதி பள்ளிவாசலில் போருக்குரிய சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் விரைவில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!