உலகம்
4 பணயக்கைதிகள் மீட்க 274 பாலஸ்தீனிய பொதுமக்களை கொன்ற இஸ்ரேல் : உலகநாடுகள் கண்டனம் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் மீட்க இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் 274 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது. நுஸ்ரத் அகதிகள் முகாமுக்கு அருகில் இஸ்ரேலிய பணயகைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை தனது ராணுவத்துக்கு தகவல் அளித்துள்ளது.
அதன்படி அவர்களை மீட்க இஸ்ரேல் படைகள் சிறப்பு தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில்போது இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தீவிர தாக்குதல் நடந்துள்ளது. அப்போது இஸ்ரேலிய ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலில் 74 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பின் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த தாக்குதல் மூலம் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 4 பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த தாக்குதலில் 100-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!