உலகம்
"இஸ்ரேல் மீது நாங்கள் நடத்தியது எதிர் தாக்குதல் மட்டுமே" - ஐ.நா சபையில் ஈரான் கூறியது என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
போரில் ஹாமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருவதாக இஸ்ரேல் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதனைத் தொடர்ந்து சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறி அதற்கு பதிலடி தரப்படும் என்று ஈரான் சார்பில் கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை வானில் வைத்தே அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது.
அதனைத் தொடர்ந்து நேற்று ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளம் மற்றும் அணுமின் நிலையம் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இஸ்ரேல் மீது நாங்கள் நடத்தியது பாதுகாப்பு மற்றும் எதிர் தாக்குதல்தான் என ஐநா சபையில் ஈரான் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய இரானுக்கான ஐநா உறுப்பினர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், " கடந்த ஏப்ரல 1ம் தேதி இஸ்ரேல் செய்தது மிக மோசமான அத்துமீறல். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் நடத்தியது பாதுகாப்பு மற்றும் எதிர் தாக்குதல்தான். இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த பொறுப்பற்ற தன்மையால் தற்போது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!