உலகம்
"அமெரிக்காவுடன் அணு ஆயுதப் போருக்கும் தயாராக இருக்கிறோம்" - ரஷ்ய அதிபர் புதினின் கருத்தால் பரபரப்பு !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும், இந்த போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பங்கேற்பு குறித்த விவாதமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் அமெரிக்க தலையீடு ஏற்பட்டால் நிச்சயமாக அணு ஆயுதப் போருக்கும் தயாராக இருக்கிறோம் என புதின் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், அமெரிக்கா தன்னுடைய ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக செய்திகள் வருகிறது. இது நடந்தால் அது போரில் அடுத்த கட்டமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
ரஷ்யாவுக்கு இப்போது அணு ஆயுத யுத்தம் நிகழ்த்துவதற்கான சூழல் இல்லை. உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், நாங்கள் நிச்சயமாக அணு ஆயுதப் போருக்கும் தயாராக இருக்கிறோம். இந்த போரில் ஏதாவது ஒரு வகையில் அமெரிக்கா தனது ராணுவ வீரர்களை அனுப்பினால், ரஷ்யா இதைப் போரில் அமெரிக்காவின் தலையீடு என்றே கருதும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!