உலகம்
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் - ஹமாஸ் திட்டவட்டம் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே கத்தார் நாட்டின் தலையீட்டின் பேரில் 4 நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள் போன்ற பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிப்பதாக இஸ்ரேலும் ஒப்புக்கொண்டனர். அதன்படி இஸ்ரேலிய பணயக்கைதிகளும், சிறையில் இருக்கும் பலஸ்தீனியர்களும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், அதன் பின்னர் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து இரு தரப்பிலும் மீண்டும் போர் ஆரம்பமானது. இந்த நிலையில், போா் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தால் மட்டுமே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து பேசிய ஹமாஸ் அமைப்பின் ஒசாமா ஹம்தான் , "இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அதே நேரம் காசாவில் நிரந்தர போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே, எங்களிடம் பிணைக் கைதிகளாக இருப்பவா்களை விடுவிப்போம். அதை விடுத்து ஒரு சில பகுகளில் மட்டும் தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதிலோ, தற்காலிக போா் நிறுத்தம் அறிவிக்கப்படுவதிலோ எங்களுக்கு ஆா்வமில்லை. நிரந்தர போர் நிறுத்தம் என்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!