உலகம்
நோயாளியுடன் உடலுறவு.. நர்ஸ் செய்த செயலால் நீரிழிவு நோயாளிக்கு நேர்ந்த சோகம் ! - பிரிட்டனில் அதிர்ச்சி !
பிரிட்டனில் அமைந்துள்ள வேல்ஸ் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நீரிழிவு நோயாளி ஒருவரும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு 2 கிட்னிகளும் செயலிழந்து டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவருடன், அந்த மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்த பெனலோப் வில்லியம்ஸ் என்ற பெண் ஒருவர் நெருக்கமாக இருந்துள்ளார்.
இருவரும் இரகசியமாக உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் அங்கிருக்கும் சக ஊழியர்களுக்கு தெரியவே அவர்களும் பெனலோப் வில்லியம்ஸை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதனை செவி மடுக்காமல் தனது நோயாளியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று அந்த நோயாளி, பெனலோப் வில்லியம்ஸை அழைத்துள்ளார்.
மேலும் தான் மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில் இருப்பதாக கூறிய அவர், இந்த நார்ஸை தனியாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். இவரும் தான் செய்த பணியை பாதியிலே விட்டுவிட்டு இவரை காண கார் பார்க்கிங்கிற்கு வந்துள்ளார். அங்கே இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், காரின் பின் பக்கத்தில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த நபருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நர்ஸ், அங்கிருந்து உடனடியாக ஓடி தனது சக ஊழியர் ஒருவரை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அதற்குள்ளும் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் தாங்கள் பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் உடற்கூறாய்வு முடிவில், அந்த நபர் உடலுறவில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவமனையின் விதியை மீறி நோயாளியுடன் உறவில் இருந்ததாகவும், குற்றத்தை மறைக்க முயன்ற குற்றத்துக்காகவும், மருத்துவமனையில் இருந்து நீக்கப்பட்ட அந்த நர்ஸ், போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!