உலகம்
இங்கிலாந்தின் முக்கிய நகரில் வெடித்து சிதறிய வெடிகுண்டு.. பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம் !
கடந்த 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரு அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகள் மற்றொரு அணியிலும் சேர்ந்து போரிட்டன.
இந்த போரின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜெர்மனியால் கைப்பற்றப்பட்ட நிலையில், போரில் பிரான்ஸ்க்கு ஆதரவாக போரிட்ட பிரிட்டன் மீது ஜெர்மனி பலமுறை வான்தாக்குதல் நடத்தியது. அதேபோல ஜெர்மனியின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிரிட்டன் விமானங்களின் ஜெர்மனி மேல் பறந்து தாக்குதல் நடத்தியது.
இந்த போரில் சோவியத் யூனியனின் படைகள் ஜெர்மனியை வீழ்த்தி அதன் தலைநகர் பெர்லினை கைப்பற்றிய நிலையில் இந்த இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது. ( அதன்பின்னர் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கா ஆசியாவில் நடந்த இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது)
ஆனால், இந்த போர் முடிவடைந்தாலும் இந்த போரில் இரு தரப்பு நாடுகளாலும் பயன்படுத்தப்பட்ட ஏராளமான வெடிகுண்டுகள் வெடிக்காமல் தற்போது வரை பல இடங்களில் காணப்படுகிறது.சில நேரங்களில் எதிர்பாராத நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டு வெடித்து உயிர் பலியான சம்பவங்களும் நடந்துள்ளது.
அந்த வகையில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டு வெடிக்காத குண்டு ஒன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 94 மைல் தொலைவில் இருக்கும் நார்போக் என்ற நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த குண்டு கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அகற்றப்பட்டு வெடிகுண்டை செயல் இழக்க வைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகளுக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதில் தோல்வி ஏற்பட்டு திடீரென அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.
தீப்பிழம்புகளுடம் பயங்கர சத்தத்தோடும் வெடித்த இந்த வெடிகுண்டால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த வெடிகுண்டு விபத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!