விளையாட்டு

அஸ்வின்-ஜடேஜா சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி !

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அஸ்வின்-ஜடேஜா சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புகழ்பெற்ற பழமைவாய்ந்த ஆஷஸ் தொடருக்கு பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மாறியுள்ளதால் இது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. மேலும், கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்த கோப்பையை இந்திய அணியே வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த முறை இந்த தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டி வருகிறது.

அஸ்வின்-ஜடேஜா சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி !

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் வார்னர், கவாஜா ஆகியோரை அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஷமி , சிராஜ் ஆகியோர் வெளியேற்றினர். ஆனால், அதன்பின்னர் களமிறங்கிய லபுசனே மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் கணக்கை மெதுவாக உயர்த்தினர். 82 ரன்கள் சேர்த்த இந்த இணையை ஜடேஜா காலி செய்தார்.

அஸ்வின்-ஜடேஜா சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி !

ஜடேஜாவின் பந்தில் அடுத்தடுத்து லபுசனே, ரென்ஸா, ஸ்மித் ஆகியோர் ஆட்டமிழக்க அந்த அணி தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த ஹாண்ட்காப் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் சிறிது பார்ட்னெர்ஷிப் அமைக்க அதை அஸ்வின் காலிசெய்தார்.

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களை ஜடேஜா, அஸ்வின் ஜோடி விரைவாக வெளியேற்ற முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

அஸ்வின்-ஜடேஜா சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி !

அதன்பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 120 ரன்கள், அக்சர் படேல் 84, ரவீந்திர ஜடேஜா 70 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் அறிமுக பந்துவீச்சாளர் முர்பி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜடேஜா,அக்சர் படேல், சமி ஆகியோரும் விக்கெட் வேட்டையை நடத்த இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 91 ரன களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்து.

அஸ்வின்-ஜடேஜா சூழலில் சுருண்ட ஆஸ்திரேலியா.. இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி !

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாம் இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்த, ஜடேஜா,சமி தலா 2 விக்கெட்டுகள், அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 7 விக்கெட் மற்றும் 70 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தினார்.

banner

Related Stories

Related Stories